குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது – நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது – பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது – பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் 1965 ஆம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த குழந்தைகள் தமிழ்த் திரைப்படமாகும். இது அமெரிக்கத் திரைப்படமான தி பேரண்ட் ட்ராப் (1961) ஐ அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜமுனா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க நாகேஷ், சுந்தர்ராஜன், ஜி. வரலட்சுமி, சாந்தா, குட்டி பத்மினி, எம். எஸ். எஸ். பாகாயம், வி. ஆர். திலகம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். பிரிந்த பெற்றோரை மீண்டும் சேர்க்க முயற்சிக்கும் இரட்டை சகோதரிகளின் கதையை இது சொல்கிறது.
ஏவிஎம் புரொடக்சன்ஸ் தயாரித்து எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படம் 19 நவம்பர் 1965 அன்று வெளியானது.